Home One Line P1 “காப்பீட்டுத் திட்டங்களை மலிவு விலைக்கு அறிமுகம் செய்யுங்கள்!”- குவான் எங்

“காப்பீட்டுத் திட்டங்களை மலிவு விலைக்கு அறிமுகம் செய்யுங்கள்!”- குவான் எங்

765
0
SHARE
Ad
படம்: நன்றி சன் டெய்லி

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள காப்பீட்டுக் திட்டங்கள் மலிவுடையதாக இருக்க வேண்டும் என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார். நாட்டின் காப்பீட்டு ஊடுருவல் விகிதம் அதன் 2020 இலக்கை விட மிகக் குறைவாக உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

துன் ரசாக் எக்ஸ்சேஞ்சில் (டிஆர்எக்ஸ்) நேற்று செவ்வாய்க்கிழமை மெனாரா புருடென்ஷியல் திறப்பு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லிம், மலேசியாவில் உள்ள காப்பீட்டாளர்களுக்கு குறைந்த வருமானம் உடையவர்கள் அல்லது பி40 பிரிவினருக்குக்காக  குறைந்த சேவை மற்றும் குறைந்த பாதுகாப்பு காப்பீட்டு திட்டங்களை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார்.

2020-க்குள் 75% தேசிய காப்பீட்டு ஊடுருவல் வீத இலக்கை அடைய வாய்ப்பில்லை என்று லிம் சுட்டிக்காட்டினார்.

#TamilSchoolmychoice

மலேசியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தற்போது காப்பீடு கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறினார். அதில் ஆயுள் காப்பீட்டு ஊடுருவல் விகிதம் 55 விழுக்காடாக பல ஆண்டுகளாக அதே நிலையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.