Home One Line P1 மலையாள சமூகத்தினருக்கு ஓணம் திருநாள் வாழ்த்தினை தெரிவித்த மாமன்னர்!

மலையாள சமூகத்தினருக்கு ஓணம் திருநாள் வாழ்த்தினை தெரிவித்த மாமன்னர்!

1215
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை மலையாள சமூகத்தினர் கொண்டாடி வரும் ஓணம் திருநாளை ஒட்டி மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் இராணியார் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

ஓணம் திருநாள் வாழ்த்துகள். அனைத்து மலையாள நண்பர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்என்று இஸ்தானா நெகாராவின் இன்ஸ்டாகிராம் கணக்கு வழியாக மாமன்னர் தம் வாழ்த்தினை பதிவிட்டிருந்தார்.

மலையாள சமூகத்தின் அறுவடை திருவிழாவான ஓணம், மலையாள நாட்காட்டியின் முதல் மாதமானசிங்கம்‘ (ஆகஸ்டுசெப்டம்பர் சமமான) மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஒரு பெரிய அறுவடையுடன் திரும்பி வந்ததாக நம்பப்படும் புகழ்பெற்ற பேரரசரைக் கொண்டாட இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.