Home One Line P1 ரொனால்டொ : ஒரே விளம்பர நிறுவனத்தில் ஆண்டுக்கு 75 மில்லியன் ரிங்கிட் வருமானம்

ரொனால்டொ : ஒரே விளம்பர நிறுவனத்தில் ஆண்டுக்கு 75 மில்லியன் ரிங்கிட் வருமானம்

1090
0
SHARE
Ad

ரோம் – இத்தாலியின் முன்னணி காற்பந்து குழுவான ஜூவெண்டசுக்காகத் தற்போது விளையாடி வருபவர் உலகின் மிகச் சிறந்த காற்பந்து ஆட்டக்காரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஒவ்வோர் ஆண்டும் உலகின் சிறந்த காற்பந்து விளையாட்டாளருக்கான போட்டியில் கடந்த சில ஆண்டுகளாக இவருக்கும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸிக்கும் இடையில்தான் கடுமையான போட்டி நிகழும்.

இதுவரையில் 5 முறை உலகின் சிறந்த காற்பந்து விளையாட்டாளர் விருதைப் பெற்றிருக்கிறார் ரொனால்டோ.

காற்பந்து விளையாட்டாளர்கள் தங்களின் ஆட்டத் திறனுக்காக மில்லியன் கணக்கான வருமானத்தைப் பெறுவது ஒருபுறமிருக்க, தங்களின் விளம்பரங்களுக்காக இன்னொரு புறத்தில் மில்லியன் கணக்கான வருமானத்தைப் பெறுவது வழக்கம்.

#TamilSchoolmychoice

அந்த வகையில், ரொனால்டோ, அமெரிக்காவின் நைக்கி (Nike Inc) என்ற அனைத்துலக விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராகத் திகழ்கிறார்.

இதற்காக, ஓராண்டுக்கு அவர் பெறும் வருமானம் எவ்வளவு தெரியுமா?

மலேசிய ரிங்கிட் மதிப்பில் 75 மில்லியன் எனத் தெரிவிக்கிறது புளும்பெர்க் வணிக ஊடகம்!

நைக்கியுடன் 10 ஆண்டுகளுக்கான விளம்பர ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளார் ரொனால்டோ. ஏதாவது ஒரு முதல்நிலை காற்பந்து குழுவுக்கு அவர் விளையாடும் வரை இந்த ஒப்பந்தம் தொடரும். அப்படிப் பார்த்தால் தனது 40-வது வயது வரை ரொனால்டோ இந்த வருமானத்தைத் தொடர்ந்து பெற வாய்ப்பிருக்கிறது.

போர்ச்சுகல் நாட்டுக்காக விளையாடும் ரொனால்டோ, முன்பு இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட், ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் ஆகிய குழுக்களுக்காகவும் விளையாடியவர்.

நைக்கி மூலம் 75 மில்லியன் வருமானத்தைப் பெறுவதோடு, கூடுதல் ஊக்குவிப்பு சன்மானத் தொகைகளையும் ரொனால்டோ பெறுகிறார். உதாரணமாக, 2016-இல் உலகின் மிகச் சிறந்த காற்பந்து விளையாட்டாளர் என்ற விருதைப் பெற்றதற்காக அவருக்குக் கூடுதலாக 18 மில்லியன் ரிங்கிட்டை நைக்கி வழங்கியது.