பகாமாஸ்: டொரியான் சூறாவளியின் தாக்கத்தை அடுத்து நேற்று புதன்கிழமை சுமார் 2,500 பேர் காணாமல் போயுள்ளதாக பகாமாஸ் அரசு தெரிவித்துள்ளதாக அனடோலு நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாக பெர்னாமா பதிவிட்டுள்ளது.
இந்த அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை தேசிய அவசரநிலை மேலாண்மை முகமை செய்தித் தொடர்பாளர் கார்ல் ஸ்மித் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
இப்பட்டியல் இன்னும் இறுதி செய்யப்பட்டு வருவதாக ஸ்மித் தெரிவித்தார். மேலும் அரசாங்க தரவுகளின்படி, தஞ்சம் புகுந்த தனிநபர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட பிற நபர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை மீண்டும் கணக்கிட வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.
சரிபார்க்கப்பட்டப் பிறகு இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடையக்கூடும். கடந்த ஞாயிற்றுக்கிழமை டொரியான் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகாமாஸில் ஒரு வாரத்திற்கும் மேலாக தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இந்த சூறாவளியில் சுமார் 50 பேர் இறந்துள்ளதாகவும், மேலும் தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.