வாஷிங்டன்: டொரியான் சூறாவளியின் விளைவாக பகாமாஸில் குறைந்தது ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளதாக துருக்கி செய்தி நிறுவனமான அனடோலு குறிப்பிட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை பிரதமர் ஹூபர்ட் மின்னிஸ் வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளி அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து அமெரிக்க நிலப்பகுதிக்குச் செல்லும் வழியில் குறைந்தது 21 பேர் காயமடைந்தனர் என்றும் மினிஸ் கூறியிருந்தார்.
“டொரியான் மிகவும் ஆபத்தான சூறாவளியாக உள்ளது,” என்று மினிஸ் தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
மணிக்கு 183 மைல் (மணிக்கு 295 கிலோமீட்டர்) பலத்த காற்றுடன் கூடிய புயல், அட்லாண்டிக் பெருங்கடலில் இதுவரை பதிவான வலிமையான ஒன்றாக கருதப்படுகிறது.
தேசிய சூறாவளி மையத்தின்படி, டொரியான் தற்போது தென்கிழக்கு அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் 4-வது வகை சூறாவளியாகக் காணப்படுகிறது. ஆனால் எந்தவொரு பெரும் நேரடியாக தாக்காது என்று கூறப்படுகிறது.