கோலாலம்பூர்: ஓய்வூதிய வயது வரம்பை 60 லிருந்து 65 ஆக உயர்த்த மலேசிய தொழிற்சங்க அமைப்பு (எம்டியூசி) முன்வைத்த திட்டத்தை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாதிக் எதிர்த்துள்ளார்.
இளைஞர்களிடையே வேலையின்மை பிரச்சனை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
“ஓய்வூதிய வயதை 60 முதல் 65 வயதாக உயர்த்துவதற்கான எம்டியூசியின் முன்மொழிவை நான் எதிர்க்கிறேன். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுவது துல்லியமானது அல்ல. ஜப்பான் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 3.4 விழுக்காடு, சிங்கப்பூரில் 5.9 விழுக்காடு மற்றும் ஜெர்மனியில் 6.2 விழுக்காடு மட்டுமே. மலேசியாவில் 500,000 வேலையற்ற இளைஞர்கள் (10.7 விழுக்காடு) உள்ளனர்” என்று அவர் இன்ஸ்டாகிராம் காணொளி பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து ஆராயப்படும் என்று மனிதவளத் துறை அமைச்சர் எம்.குலசேகரன் குறிப்பிட்டிருந்தார்.