Home One Line P1 மலேசியக் கல்வி அமைச்சரின் கவனத்தை ஈர்த்த ‘ராட்சசி’ திரைப்படம்!

மலேசியக் கல்வி அமைச்சரின் கவனத்தை ஈர்த்த ‘ராட்சசி’ திரைப்படம்!

1635
0
SHARE
Ad
படம்: டி ஸ்டார் நாளிதழ் முக்கியச் செய்தி அங்கம்

கோலாலம்பூர்: கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக், ‘ராட்சசிதமிழ் திரைப்படம் மலேசிய நாட்டின் கல்வியில் செயல்படுத்தப்பட்டு வரும் கொள்கைகளையும், மாற்றங்களையும் சித்தரிப்பதாக தமது முகநூல் பக்கத்தில் விவரித்துள்ளார்.

சமீபக்காலமாக இந்தியர்கள் மட்டுமல்லாது, மலாய் மற்றும் பிற சமூகத்தினரைக் கவர்ந்த படமாக நடிகை ஜோதிகா நடித்து வெளியான ராட்சசி திரைப்படம் விளங்குகிறது.

இலவச காலை உணவு திட்ட முன்முயற்சியை உள்ளடக்கிய தனது சிந்தனைகளை, இந்த திரைப்படம் விளக்கியுள்ளது என்றும், ஆசிரியர்கள் மாணவர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுவதைக் காண விரும்பும் தமது ஆசையையும் முன்வைக்கிறது என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த படம் ஒரு அசாதாரண கதை அம்சத்தைக் கொண்டிருப்பதாகவும், ஜோதிகா முக்கியமான கதாபாத்திரத்தை சிறந்த முறையில் வெளிப்படுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

படம் பார்ப்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், இப்படத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தையும் நம் நாட்டின் நிலைமைக்கு பிரதிபலித்தேன். கீதா ராணி ஒரு சிறந்த சூப்பர் ஹீரோவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெரிய மாற்றங்கள் சாத்தியமற்றது அல்ல என்பதை அவர் நமக்கு நிரூபிக்கிறார்என்று அவர் தனது முகநூல், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் நேற்று திங்கட்கிழமை பதிவிட்டிருந்தார். மேலும், இப்படதித்னை தாம் தனது அதிகாரிகளுடன் கடந்த சனிக்கிழமை பார்த்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

தனது அரசாங்கத்தால் நடத்தப்படும் பாழடைந்த பள்ளியின் நிலைமையை மேம்படுத்த விரும்பும் வலுவான ஒழுக்கத்துடனான ஒரு தலைமை ஆசிரியருக்கு ஏற்படும் சவால்கள் , மற்றும் அதனை எதிர்கொள்வதில் ஜோதிகா காட்டிய முனைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக அமைச்சர் சித்தரித்துள்ளார்.

தோல்வியடைந்த மாணவர்களின் பிரச்சனையை தீர்ப்பதில் காவல் துறை உட்பட அனைவரையும் ஈடுபடுத்துவதில் கீதா என்ற கதாபாத்திரம் வெற்றி பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தான் நாங்கள் செய்ய முயற்சிக்கிறோம். இனிமேல் மாணவர் தோல்விகள் ஏற்படாது என்பதற்காக அனைத்து கோணங்களிலும் அமலாக்கம் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

கீதா அனைத்து பெற்றோர்களையும் சந்தித்து, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை உருவாக்கி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் தீவிரமாக ஈடுபடுவதை உறுதி செய்வதையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

கல்வியை அனைவரின் கூட்டுப் பார்வையாக மாற்றுவது மஸ்லீயின் மிகப்பெரிய அபிலாஷையாகும், ஏனெனில் கல்வி உள்ளூர் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்று அவர் நம்புகிறார்.

அவர் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அனைவரையும் இப்படத்தினை பார்க்க அழைப்பு விடுத்துள்ளார்.