Home One Line P1 மலாக்கா: ஜாகிர் நாயக்கின் நிகழ்ச்சி குறிப்பிட்ட தேதியில் நடக்கும்!

மலாக்கா: ஜாகிர் நாயக்கின் நிகழ்ச்சி குறிப்பிட்ட தேதியில் நடக்கும்!

637
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் உடனான நிகழ்ச்சி குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என்று மலாக்கா மாநிலத்தின் தொழில்துறை, வணிகம் மற்றும் முதலீட்டுத் தலைவர் முகமட் ராபிக் நைசாமொகிதின் தெரிவித்தார்.

எல்லா தரப்பிலிருந்தும் பெரும் அழுத்தம் இருந்தபோதிலும், இந்த நிகழ்ச்சியைத் தொடர நான் உறுதியாக இருக்கிறேன். டாக்டர் இந்த சனிக்கிழமையன்று மஸ்ஜிட் சீனாவில் கலந்து கொள்வதை ஜாகிர் நாயக் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார், ”என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் யாரும் அதனை அரசியல் மயப்படுத்தக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சி அரசாங்கமோ அல்லது அரசியல் கட்சிகளோ ஏற்பாடு செய்யவில்லை, ஆனால் மலாக்கா மஸ்ஜிட் சீனாவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஎன்று அவர் கூறினார்.

முன்னதாக, செப்டம்பர் 7-ஆம் தேதி ஜாகிர் நாயக் நிகழ்ச்சியை நடத்த மலாக்கா காவல் துறையினருக்கு எந்தத் தடையும் இல்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மாநில காவல் துறைத் தலைவர் ராஜா ஷாஹ்ரோம் ராஜா அப்துல்லா கூறுகையில், இந்த நிகழ்ச்சியில் பிரார்த்தனைகளை மட்டும் சார்ந்திருப்பதாலும், அதில் ஜாகிரின் உரை சம்பந்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

டாக்டர் ஜாகிர் நாயக்கை மலாக்காவுக்கு அழைப்பதற்கான எனது நோக்கம் குறித்து, நான் மலாக்கா முதலமைச்சருக்கு அறிவித்துள்ளேன். காவல்துறை பரிந்துரைத்தபடி உரையில் அவர் ஈடுபடாதவரை அவருக்கு இந்நிகழ்ச்சியில் எந்த தடையும் இல்லைஎன்று ராபிக் கூறினார்.

முன்னதாக, “மாலாம் இஸ்லாம் பெர்சாத்துஎன்ற நிகழ்ச்சியின் சுவரொட்டி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு சர்ச்சைக்குள்ளானது.