வாஷிங்டன் – உலகின் சொர்க்கபூமியாக அமெரிக்கா வர்ணிக்கப்பட்டாலும், அடிக்கடி இயற்கைப் பேரிடர்களை – குறிப்பாக புயல்களையும், சூறாவளிகளையும் சந்திக்கும் நாடாகவும் அது திகழ்கிறது.
இந்த முறை நமது நாட்டின் பிரபல பழமான ‘டொரியான்’ பழத்தின் பெயரைக் கொண்டிருக்கும் சூறாவளி தற்போது அசுர வேகத்தில் பகாமாஸ் தீவுகளை நோக்கி நகர்கிறது. பகாமாஸ் தீவுகளில் பலத்த சேதங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் ‘டொரியான்’ சூறாவளி அமெரிக்காவின் வடமேற்குப் பகுதிகளையும் தாக்கக் கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அண்மைய சூறாவளிகளில் மிகவும் வலுவான சூறாவளியாகக் கருதப்படும் டொரியான் ஐந்தாவது கட்ட அபாய நிலை சூறாவளியாகக் குறிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், வட மற்றும் தென் கரோலினா மாநிலங்கள் அதிகம் பாதிப்படையும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன