கோலாலம்பூர்: உள்ளூர் சொத்து சந்தையில் சீனர்கள் முதலீடு செய்வதை ஈர்ப்பதற்காக, சீனா அல்லது ஹாங்காங்கில் வீட்டு உரிமையாளர் பிரச்சாரத்தை (ஹவுஸ் ஓனர்ஷிப் கெம்பெயின்- எச்ஒசி) ஏற்பாடு செய்வதை புத்ராஜெயா ஆராய்ந்து வருவதாக வீட்டுவசதி மற்றும் ஊராட்சிமன்ற அமைச்சர் சுரைடா காமாருடின் தெரிவித்தார்.
இம்முறையானதுமலிவானதுஎன்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த பிரச்சாரத்தை சீனாவில் அல்லது ஹாங்காங்கில் நாங்கள் ஏற்பாடு செய்யலாம் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், இங்கே ஒரு வீட்டை மலிவாக வாங்கலாம். நான் ஹாங்காங்கில் 250 சதுர அடி மதிப்புள்ள 3 மில்லியன் ரிங்கிடுக்கு ஒரு அடுக்குமாடி இருப்பிடத்தைப் பார்த்தேன். ஒரு அமைச்சரால் கூட ஹாங்காங்கில் சொத்து வாங்க முடியாது” என்று அவர் கூறினார்.
சுரைடாவின் இந்த அறிவிப்புக்கு பிறகு அவரை பதவி விலகுமாறு பல்வேறு தரப்புகள் கூறிவருகின்றனர்.