Home One Line P2 லடாக்கிலுள்ள பங்கோங் ஏரிக்கு அருகில் இந்திய, சீன இராணுவ வீரர்களுக்கிடையே பதற்றம்!

லடாக்கிலுள்ள பங்கோங் ஏரிக்கு அருகில் இந்திய, சீன இராணுவ வீரர்களுக்கிடையே பதற்றம்!

920
0
SHARE
Ad

புது டில்லி: லடாக்கில் நேற்று புதன்கிழமை இந்தியா மற்றும்  சீன இராணுவத்துக்கு இடையே பதற்றம் நிலவியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. ஆயினும், தூதுவர் குழு அளவிலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் அந்நிலை முடிவுக்கு வந்ததாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லடாக்கில் உள்ள பங்கோங் (Pangong Tso) ஏரி பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்த சீன இராணுவத்தினர், ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய இராணுவ வீரர்களிடம் மோதும் வகையில் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தங்கள் பகுதி என்றும் இங்கிருந்து வெளியேறும்படியும் இந்திய இராணுவத்தினருக்கு அறிவுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

உண்மையான எல்லைக்கட்டுப்பாடு குறித்து மாறுபட்ட கருத்துகள் காரணமாக, இத்தகைய சம்பவங்கள் நடப்பதாகவும் அவை பெரும்பாலும் இது போன்ற பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படுவதாகவும் இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.