கோலாலம்பூர் – பிரதமர் துன் மகாதீரின் குதிரை சவாரி மீதான ஆர்வமும், ஈடுபாடும் அனைவரும் அறிந்ததுதான். நேற்று காலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் காலையில் மழைத் தூறல் இருந்தபோதிலும், தனக்கு 94 வயது என்ற நிலையிலும் தனது குதிரை சவாரி மோகத்தை மறக்காமல் மேற்கொண்டார் துன் மகாதீர்.
புத்ரா பல்கலைக் கழக குதிரை சவாரி மையத்தில் துன் மகாதீர் மேற்கொண்ட குதிரை சவாரி காணொளியாக எடுக்கப்பட்டு அவரது அதிகாரத்துவ சமூக ஊடகங்களிலும், யூடியூப் தளத்திலும் வெளியிடப்பட்டது.
ஏறத்தாழ ஒருமணி நேரம் குதிரை சவாரி செய்த மகாதீர் அந்த சமயத்தில் காற்றுத் தூய்மைக்கேட்டிற்காக அணியும் முகக் கவசத் துணியை அணிந்திருந்தார்.
பின்னர் தனது சமூக ஊடகத்தில் இது குறித்து பதிவிட்ட மகாதீர் “என்னைப் பொறுத்தவரையில் குதிரை சவாரி என்பது எனக்கான சிகிச்சை போன்றதாகும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தான் ஓட்டிய குதிரையை மகாதீர் தட்டிக் கொடுத்ததோடு, அந்தக் குதிரைக்கு கேரட் போன்ற உணவுகளையும் அளித்தார்.
மகாதீர் குதிரை சவாரி செய்யும் அந்த யூடியூப் காணொளியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: