Home One Line P1 “மோடி, ஜாகிரை அனுப்பக் கோரவில்லை, மகாதீர் மீண்டும் வலியுறுத்தல்!”

“மோடி, ஜாகிரை அனுப்பக் கோரவில்லை, மகாதீர் மீண்டும் வலியுறுத்தல்!”

736
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த ஜனவரி மாதம் ஜாகிர் நாயக்கை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பக் கோரியதாக இந்தியா நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்த போதிலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பின் போது அது குறித்து எழுப்பப்படவில்லை என்று பிரதமர் மகாதீர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

நான் மோடியை சந்தித்தேன், அவர் ஜாகிரைக் குறிப்பிட்டார், ஆனால் அவரை திருப்பி அனுப்பும்படி அவர் கேட்கவில்லைஎன்று பிரதமர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் பிரதமர், நரேந்திர மோடியுடன் ரஷ்யாவில் சந்தித்தபோது ஜாகிர் நாயக்கின் ஒப்படைப்பு கோரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்ற மகாதீரின் கூற்றுக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

மாறாக, கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி விளாடிவோஸ்டாக்கில் மோடியுடன் மகாதீர் சந்தித்தபோது இந்த விவகாரம் எழுப்பப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.