வாஷிங்டன்: சவூதியின் முக்கிய எண்ணெய் வசதிகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பொம்பியோ சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்வார் என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 17-19 அன்று பொம்பியோ சவுதி நகரமான ஜெட்டா மற்றும் ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபி ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட்டாவில், அமெரிக்காவின் உயர்மட்ட தூதர், சவுதி இளவரசர் முகமட் சல்மானை சந்தித்து இராச்சியத்தின் எண்ணெய் வசதிகள் மீதான சமீபத்திய தாக்குதல்கள் மற்றும் அப்பகுதியில் ஈரானிய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான முயற்சிகள் பற்றி விவாதிப்பார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில், அப்பகுதி மற்றும் இருதரப்பு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க, பாம்பியோ ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமட் சாயெட் அல் நஹ்யானுடன் பேசுவார் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சவுதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீது கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னர் பொம்பியோவின் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது பரந்த மத்திய கிழக்கு நாடுகளில் உலகளாவிய கவலைகளை எழுப்பியுள்ளதோடு, உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர வழிவகுத்துள்ளது.