Home One Line P1 புகை மூட்டம்: பேராக், சிலாங்கூர், சரவாக் பள்ளிகள் மூடப்பட்டன!

புகை மூட்டம்: பேராக், சிலாங்கூர், சரவாக் பள்ளிகள் மூடப்பட்டன!

865
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காற்று மாசுபாடு குறியீட்டு (ஏபிஐ) 200-க்கும் மேல் பதிவான நிலையில், புத்ராஜெயா மற்றும் கிள்ளானில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று புதன்கிழமை மூடப்பட்டுள்ளன. சிலாங்கூர் மற்றும் பேராக்கில் முறையே 214 மற்றும் 288 பள்ளிகளை இன்று காலை மூடியுள்ளன.

கல்வி அமைச்சு இன்று காலை 5 மணிக்கு தனது முகநூல் பக்கத்தில் பள்ளிகள் மூடப்படுவதாக அறிவித்திருந்தது.

நள்ளிரவுக்குள் காற்று மாசுபாடு குறியீடு 200-க்கும் மேல் பதிவானதால், சிலாங்கூரில் உள்ள பள்ளிகள் அதிகாலை 5 மணிக்கு மூடப்படுவதாக அது அறிவித்திருந்தது. பெட்டாலிங் பெர்டானா, கோலா சிலாங்கூர், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் உத்தாமாவில் உள்ள மேலும் 99 பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டன.

#TamilSchoolmychoice

காலை 7 மணி நிலவரப்படி, சிலாங்கூர் மற்றும் புத்ராஜெயாவில் புகை மூட்டம் இன்னும் குறையவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு புத்ராஜெயா மற்றும் கிள்ளானில் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பேராக் மாநிலத்தில் மொத்தமாக 288 பள்ளிகள் புகை மூட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளதாக பேராக் மாநில கல்வி இயக்குனர் டாக்டர் முகமட் சுஹாய்மி முகமட் அலி தெரிவித்தார். சரவாக் ஶ்ரீ அமானில் அபாயகரமான ஏபிஐ பதிவு நீக்கப்பட்டிருந்தாலும், ஆரோக்கியமர்ற சூழலை அங்கு நிலவுகிறது. 337 பள்ளிகள் புகை மூட்டம் காரணமாக இன்றும் மூட்டப்பட்டுள்ளது.