Home One Line P1 “நாட்டின் வறுமை நிலையை ஆராய முறையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்!”- அன்வார்

“நாட்டின் வறுமை நிலையை ஆராய முறையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்!”- அன்வார்

690
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் வறுமை விகிதம் 15 விழுக்காடு என்றும், 2016-இல் தெரிவிக்கப்பட்டபடி 0.4 விழுக்காடு அல்ல என்றும் ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) அளித்த அறிக்கையைத் தொடர்ந்து மலேசியாவின் வறுமை விகிதத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டார்.

மலேசியாவில் வறுமை விகிதங்கள் குறித்த ஆய்வுகள் துல்லியமான ஆராய்ச்சி முடிவுகளை உறுதிப்படுத்துவதற்காக, சரியான முறைகளைப் பயன்படுத்தி அளவிடப்பட வேண்டும் அல்லது பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் பெல்டாவின் எந்த கிராமத்திலும் அல்லது பகுதியிலும் குறைந்த வருமானம் கொண்ட ஏழை மக்கள் இருப்பதை நான் காண்கிறேன். எனவே, நாட்டின் உண்மையான வறுமை விகிதம் அரசாங்கத்தின் 0.4 விழுக்காட்டை விட அதிகமாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.”

#TamilSchoolmychoice

ஐநாவின் வறுமை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சிறப்பு நிருபர், பேராசிரியர் பிலிப் ஆல்ஸ்டன் மலேசியாவில் மிக உயர்ந்த வறுமை விகிதத்தைக் கொண்டிருப்பதாகவும் அதன் உண்மையான வறுமை விகிதம் 15 விழுக்காடு என்று கூறியதையும் நான் உண்மை என்று நம்புகிறேன்என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், முந்தைய அரசாங்கமான தேசிய முன்னணி நாட்டில் வறுமை ஒழிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்திய விதம் வெளிப்படையானது அல்ல எனவும், நிறைய கசிவுகள் இருந்ததாகவும் அன்வார் கூறினார்.

ஏழைகளுக்கு உதவுவதற்காக ஆண்டுக்கு 28 பில்லியன் ரிங்கிட் வரை நன்கொடை அளிக்கப்படுகிறது. ஆனால், அது சென்றடைய வேண்டிய இடத்தில் சென்றடையவில்லை. மீனவரோ அல்லது விவசாயிகளோ அதனால் பயனடைய வில்லை. அப்பணமானது கிளைத் தலைவர்களுக்கு சென்றுவிடுகிறது.”

எனவே இது மீண்டும் நடக்க நாங்கள் விரும்பவில்லை. உதவிகள் அதன் இலக்கை அடைய வேண்டும். செயல்படுத்தலை நாம் அடையாளம் காண வேண்டும். இனிமேலும், ஊழல் மற்றும் கசிவு பிரச்சனைகள் இருக்கக் கூடாதுஎன்று அவர் மேலும் கூறினார்.