Home One Line P2 சிதம்பரத்திற்கு அக்டோபர் 3-ஆம் தேதி வரை தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது!

சிதம்பரத்திற்கு அக்டோபர் 3-ஆம் தேதி வரை தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது!

677
0
SHARE
Ad

புது டில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற தடுப்புக் காவல் அக்டோபர் 3-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கபட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தாம் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் திகார் சிறையில் இருப்பதாகவும், அங்கு தமக்கு தலையணையோ அல்லது இருக்கையோ கொடுக்கப்படவில்லை என்றும் சிதம்பரம் தெரிவித்தார். மேலும், இதனால் தமக்கு முதுகு வலி வந்துவிட்டது என்று முறையிட்டுள்ளார்.

அனைத்தையும் கேட்டுக் கொண்ட நீதிமன்றம், சிதம்பரத்தின் காவலை வரும் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது

#TamilSchoolmychoice

.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007-ஆம் ஆண்டு, .என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.