Home One Line P1 அஸ்ட்ரோவின் ‘உங்கள் திரை ஆன் டிமாண்ட்’ நிகழ்ச்சிகள்

அஸ்ட்ரோவின் ‘உங்கள் திரை ஆன் டிமாண்ட்’ நிகழ்ச்சிகள்

960
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அஸ்ட்ரோ உங்கள் திரை ஆன் டிமாண்ட் (on demand) சேவை, வாடிக்கையாளர்களுக்கு என்ன நிகழ்ச்சிகள் தேவை?, எப்போது தேவை? மற்றும் எங்கே தேவை? ஆகியவற்றின் அடிப்படையில், பல்வேறு பொழுதுப் போக்கு அம்சங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது.

வாடிக்கையாளர்கள் உங்கள் திரை ஆன் டிமாண்ட் சேவையை நாடி தங்கள் விரும்புகின்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை விரும்புகின்ற நேரத்தில் உடனுக்குடன் தேர்ந்தெடுத்துக் கண்டு மகிழலாம். அவ்வகையில் உள்ளூர் தயாரிப்பில் வெளிவந்த பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை ஆன் டிமாண்ட் சேவையின் வழி கண்டு களிக்கலாம்.

பெட்டிக்குள்ள என்ன?

மலேசிய ரசிகர்கள் மத்தியில் மிகவும் கவர்ந்த ஸ்ரீ சோனிக் தொகுத்து வழங்கும் ‘பெட்டிக்குள்ள என்ன’ நிகழ்ச்சியில் நம் உள்ளூர் கலைஞர்களான டேனிஸ், ஆல்வின் மார்டின், லியோன் நெல்சன், டாவியூ புவனன், என பலர் பங்கெடுத்துள்ளார்கள். நம்முடைய கலைஞர்கள் எவ்வாறு அவரிடம் மாட்டிக் கொண்டு கொடுக்கப்படும் சவால்களை எவ்வாறு செய்கின்றார்கள் என்பது நிகழ்ச்சிகளின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

திகில்

#TamilSchoolmychoice

நம்மைச் சுற்றி எத்தனையோ மர்மம் நிறைந்த திகில் சம்பவங்கள் நடக்கின்றன. பார்ப்பவரின் மனத்தில் பயம் நிறைந்த காட்சி எழுப்பும் கதைகளுடன் அஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையின் திகில் நிகழ்ச்சியாகும்.

4 பருவங்களாக ஒளியேறி வரும் திகில் நிகழ்ச்சியில் மலேசியாவில் நடந்த திகில் கதைகள் மறுகாட்சி அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் சீசன் 5 அஸ்ட்ரோ வீண்மீன் எச்.டி அலைவரிசை 231-இல் ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளியேறுகின்றது.

ரசிக்க ருசிக்க

பயணங்களின் ஊடே ஆங்காங்கே இருக்கும் சிறந்த உணவகங்களையும், உணவுகளையும் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்ச்சி ரசிக்க ருசிக்க. அறிவிப்பாளர் பாலகணபதி வில்லியம் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் சீசன்களை ஆன் டிமாண்ட் சேவையில் கண்டு களிக்கலாம். அதுமட்டுன்றி, ரசிக்க ருசிக்க சீசன் 5 அஸ்ட்ரோ வீண்மீன் எச்.டி அலைவரிசை 231-இல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு காணத் தவறாதீர்கள்.

கே.எல் டூ கே.கே (KL to KK)

கே.எல் டூ கே.கே நிகழ்ச்சி மலேசியாவிலுள்ள பல இடங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் பாரம்பரியம், தொழில்கள், உணவுகள் என பல விஷயங்களை நமக்காகக் கொண்டு வருகின்றது. இந்நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ வானவில் 360 டிகிரி நிகழ்ச்சியின் மூலம் அறிவிப்பாளராக அறிமுகமான ஹேமா ஜி மற்றும் நடிகர், பாடகர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பிக் பாஸ் முகேன் ராவ் தொகுத்து வழங்குகின்றார்கள்.

மேல் விவரங்களுக்கு www.watchod.com என்ற இணையதளத்தை வலம் வரலாம்.