Home One Line P1 நியூயார்க் நகர காவல் துறையுடன், மலேசிய காவல் துறை ஒத்துழைப்பை உருவாக்க ஆர்வம் கொண்டுள்ளது!- மொகிதின்

நியூயார்க் நகர காவல் துறையுடன், மலேசிய காவல் துறை ஒத்துழைப்பை உருவாக்க ஆர்வம் கொண்டுள்ளது!- மொகிதின்

758
0
SHARE
Ad

நியூயார்க்: தகவல் பரிமாற்றம் மற்றும் பயிற்சி போன்ற சில அம்சங்களில் நியூயார்க் நகர காவல் துறையுடன் ஒத்துழைப்பை உருவாக்க மலேசிய காவல் துறை ஆர்வம் கொண்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை அமைச்சர் நியூயார்க் நகர காவல் துறைக்கு வருகை தந்தபோது இவ்வாறு கருத்துரைக்கப்பட்டதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

கோலாலம்பூரில்  நியூயார்க் நகர காவல் துறைக்கும் நம் காவல் துறை தலைமையகத்திற்கும் இடையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் வைத்திருப்பது குறித்து நாங்கள் விவாதித்தோம்.  தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவோ ​​அல்லது பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் பலவற்றில் அவர்களுடன் ஒத்துழைக்கவோ முடிந்தால் அது நமக்கு நன்மையாக அமையும்” என்று அமைச்சர் பெர்னாமாவிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்காவிற்கான தனது பயணத்தின் ஒரு பகுதியாக மொகிதின் நியூயார்க்கில் உள்ளார்.

கடந்த 1845-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நியூயார்க் நகர காவல் துறை, சுமார் 36,000 அதிகாரிகள் 19,000 பொது ஊழியர்களைக் கொண்ட அமெரிக்காவின் மிகப் பெரிய மற்றும் மிகப் பழமையான நகராட்சி காவல் துறையாக திகழ்கிறது.