Home One Line P1 “தே.முன்னணி வீட்டை இடித்திருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும்!”-நஜிப்

“தே.முன்னணி வீட்டை இடித்திருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும்!”-நஜிப்

840
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த புதன்கிழமை கம்பாங் கெடொண்டோங் மற்றும் பாயா ஜாராஸ் ஹிலிரில் உள்ள கிராம மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளிய சிலாங்கூர் மாநில அரசின் நடவடிக்கையை கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் முத்திரை குத்தியுள்ளார்.

தேசிய முன்னணி காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமானால், மக்கள் இன்று இருப்பதைப் போல தனிமையில், நிற்கதியில் இருக்க அனுமதித்திருக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

தேசிய முன்னணி காலத்தில் நாங்கள் நிச்சயமாக தற்காலிக அல்லது நிரந்தர குடியேற்றங்களை வழங்கியிருப்போம். அதிகாரிகளின் நடவடிக்கைகள் மிகவும் கொடூரமானவை என்று நான் கருதுகிறேன், மேலும் கருணையும் இதயமும் இல்லை.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நஜிப் முன்னதாக தற்காலிக குடியிருப்புகளில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுடன் தன் நேரத்தை செலவிட்டார். தற்போதைய நிலைமை சங்கடமானதாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் உடல் மற்றும் உணர்ச்சி நிலைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும் என்றும் அவர் விவரித்தார்.

நான்கு வயது குழந்தையும், அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை பெண்ணும் இந்த குழுவில் இருந்தால் கற்பனை செய்து பாருங்கள். கூடுதலாக, இந்த குழுவில் வீட்டுப் பத்திரங்கள் உள்ள வீடுகளும் உள்ளன. சிலருக்கு வீட்டுப் பாதிரங்கள் இல்லை. விட்டுப் பத்திரங்கள் இருக்கிறதோ இல்லையோ, தற்காலிக தங்குமிடத்திற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்குவதன் மூலம் குடியிருப்பாளர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை தீர்க்க நஜிப் மாநில அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.