கோலாலம்பூர்: ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் பெர்சாத்துவிடமிருந்து தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடத்தை மீண்டும் அக்கட்சி கோராது என்று நினைவுப்படுத்தினார்.
எந்த நம்பிக்ககிக் கூட்டணிக் கட்சி போட்டியிட வேண்டும் என்று கேட்டபோது, அவர் “தஞ்சோங் பியாய்வுக்கு ஜெசெகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தஞ்சோங் பியாய் பெர்சாத்துவுடையது. வெற்றி பெற ‘ஒன்றுபடுவோம்‘“ என்று அவர் மேலும் கூறினார்.
பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சர் டாக்டர் பாரிட் முகமட் கடந்த சனிக்கிழமை காலமானதைத் தொடர்ந்து ஜோகூரில் உள்ள தஞ்சாங் பியாய் நாடாளுமன்றத் தொகுதி காலியானது.
14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இந்த இடம் பாரம்பரியமாக ஜசெகவால் போட்டியிடப்பட்டது.
ஜோகூர் மாநில தேசிய முன்னணித் தலைவர் ஹாஸ்னி முகமட் கூற்றுபடி, தஞ்சோங் பியாய் தொகுதி தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்து இருப்பதால், அது ஒரு தரப்பினருக்கு சொந்தமானது அல்ல என்று கூறியதாக உத்துசான் மலேசியா தெரிவித்ததாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் பாரிட், மசீச வேட்பாளரான வீ ஜெக் செங்கை 524 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.