Home One Line P2 விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது!

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது!

998
0
SHARE
Ad

சென்னை: வருகிற அக்டோபர் 21-ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக நா.புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாங்குநேரி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது என்றும், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுகிறது என்றும் திமுக கூட்டணியில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல்  மு..ஸ்டாலின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. 66 வயதாகும் புகழேந்தி, திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.