Home One Line P2 178 ஆண்டுகள் பழமையான தோமஸ் குக் நிறுவனம் முடக்கப்பட்டது!

178 ஆண்டுகள் பழமையான தோமஸ் குக் நிறுவனம் முடக்கப்பட்டது!

965
0
SHARE
Ad

பிரிட்டன்: பிரிட்டனின் லீஸ்செஸ்டெர்ஷைர் பகுதியில் 1841- ஆம் ஆண்டு தோமஸ் குக் என்பவரால் தொடங்கப்பட்ட, உலகின் மிகப் பழமையான சுற்றுலா சேவை நிறுவனம்தோமஸ் குக்கின் சேவையை முடக்கப்பட்டுள்ளது.

அதன் சேவையைச் தொடரச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட கடைசி நேர முயற்சிகள் பலனளிக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

178 ஆண்டுகள் பழமையான தோமஸ் குக் நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகள் உடனடியாக முடிவுக்கு வருவதாக பிரிட்டன் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக உலகம் முழுவதும் இந்நிறுவனத்தின் வாயிலாக சுற்றுலாவுக்கு சென்றுள்ள சுமார் ஆறு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் உதவியோடு வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பிரிட்டனை சேர்ந்த ஒன்றரை லட்சம் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரும் மிகப் பெரிய பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தனது நிறுவனத்தின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், ஆயிரக்கணக்கான ஊழியர்களிடம் தோமஸ் குக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான பீட்டர் ஃபாங்க்ஹௌசர் மன்னிப்பு கோரியுள்ளார்.