கிள்ளான்: கடந்த சில வாரங்களாக அதிகமான புகை மூட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்த கிள்ளான், பினாங்கு வாழ் மக்களுக்குத் தீர்வாக இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மூன்று மணி தொடங்கி பலத்த மழை பெய்து புகை மூட்டத்தை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
பலத்த காற்றுடன் பெய்த மழையினால் ஓரிரு இடங்களில் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று காலை தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்ததாக மலேசிய காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு தெரிவித்திருந்தது.
ஆயினும், நாடு தழுவிய அளவில் காற்று மாசு குறியீட்டு அளவீடுகள் நள்ளிரவு 12 உடன் ஒப்பிடும் போது காலை 7 மணிக்குசரிவைக்கண்டுள்ளதாக அது குறிப்பிட்டிருந்தது. தற்போது இடைவிடாது பெய்த பலத்த மழையினால் புகை மூட்டப் பிரச்சனையை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலும் என்று நம்பப்படுகிறது.