Home One Line P2 அஸ்ட்ரோ “விழுதுகள்” – மாமாங்கப் பெருவிழா

அஸ்ட்ரோ “விழுதுகள்” – மாமாங்கப் பெருவிழா

1374
0
SHARE
Ad

பூச்சோங் – அஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சிகள் 12-வது ஆண்டாகத் தொடர்வதை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 28-ஆம் தேதி பூச்சோங் தமிழ்ப்பள்ளியில் மாமாங்கப் பெருவிழா மிகச் சிறப்பாக நடந்தேறியது.

விழுதுகள் நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை வற்றாத ஆதரவு வழங்கி வரும் ரசிகர்களுக்கு நன்றி கூறும் வகையில் இந்த மாமாங்கப் பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது.

காலை மணி 8 தொடங்கிய இந்நிகழ்ச்சியில் யோகா, கபடி, உரி அடித்தல் எனும் போட்டிகளில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பரிசு பொருட்களைத் தட்டிச் சென்றார்கள்.

#TamilSchoolmychoice

அதுமட்டுமின்றி, மருத்துவ முகாம், கண் பரிசோதனை, இரத்த தானம், அரசாங்க நிறுவனங்களின் முகப்புகள் என பல அரிய அம்சங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றது.
அதோடு, நம் நாட்டின் புகழ்பெற்ற தன்முனைப்பு பேச்சாளர் பேராசியர் டாக்டர் காதர் இப்ராஹிம் ‘நம் வாழ்க்கை நம் கையில்’ எனும் தலைப்பில் இந்நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

இந்த மாமாங்கப் பெருவிழாவில் விழுதுகளின் அறிவிப்பாளர்கள் ரேவதி மாரியப்பன், ஸ்ரீ குமரன் முனுசாமி, செல்வகுமாரி செல்வராஜூ, கபில் கணேசன், குணசீலன் சிவகுமார், அகலியா மணியம், அஸ்ட்ரோ தமிழ்ச் செய்திகளின் தொகுப்பாளர்கள் ஷாலினி பிரியா, மகேந்திரன் வேலுப்பிள்ளை, நம் நாட்டின் உள்ளூர் கலைஞர்களான டேனிஸ், யுவராஜ் கிருஷ்ணசாமி, நிவாஷன் என பலரும் கலந்து கொண்டார்கள்.