Home One Line P2 “மின்னுட்ப உலகின் மதிநுட்ப வளர்ச்சியில் தமிழின் இடம்” – முத்து நெடுமாறனின் உரை

“மின்னுட்ப உலகின் மதிநுட்ப வளர்ச்சியில் தமிழின் இடம்” – முத்து நெடுமாறனின் உரை

1199
0
SHARE
Ad

ஸ்கூடாய் (ஜோகூர்) – கடந்த வெள்ளிக்கிழமை செப்டம்பர் 27-ஆம் தேதி காலை 9.00 மணி தொடங்கி நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகத்தின் 12ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் சிறப்பு அங்கமாக கணினி நிபுணர் முத்து நெடுமாறனின் உரை இடம் பெற்றது.

முத்து நெடுமாறன், “மின்னுட்ப உலகின் மதிநுட்ப வளர்ச்சியில் தமிழின் இடம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அந்த சிறப்புரை அங்கத்தில் அவரோடு இணைந்து ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கம் உதவியாகச் செயலாற்றினார்.

இரண்டாம் அங்கமாக ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகத்தின்ஆண்டுப் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. இப்பொதுக் கூட்டத்தைத் தொழிலதிபரும், இசை அமைப்பாளரும் தமிழ்ப் பற்றாளருமான எஸ்.எ.அருண் அதிகாரப்பூரவமாகத் திறந்து வைத்தார்.

#TamilSchoolmychoice

அவர் பேசுகையில் இடைநிலைப் பள்ளித் தமிழாசிரியர்களின் பங்கு மகத்தானது என்று பாராட்டினார். தன்னால் முடிந்த உதவிகளைக் கழகத்திற்கு வழங்குவேன் என்று கூறினார்.

கழகத்தின் கடந்த ஓராண்டு நடவடிக்கைகளை உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் பாராட்டினர்.

பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட ஜோகூர் மாநில தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகத்தின் தலைவரான அரா.பாஸ்கரன் “அனைத்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் கழகச் செயலவையினர்களுக்கே சாரும்” என்று கூறினார்.

அரா.பாஸ்கரன்

அதே வேளையில் கழக உறுப்பினர்கள், செயலவை உறுப்பினர்கள், சிறப்பு சொற்பொழிவாளர் முத்து நெடுமாறன், திருமதி கஸ்தூரி இராமலிங்கம், எஸ்.எ.அருண் ஆகியோருக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற ஆதரவு அளித்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றிக் கூறுவதாகவும் அரா.பாஸ்கரன் தெரிவித்தார்.