Home One Line P2 இரண்டாம் உலகப் போர் கால விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு!

இரண்டாம் உலகப் போர் கால விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு!

708
0
SHARE
Ad

மாஸ்கோ: புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இரண்டாவது உலகப் போர் கால விமானம், விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் கீழே விழுந்து நொறுங்கியது. நேற்று புதன்கிழமை கனெக்டிகட் அனைத்துலக விமான நிலையமான பிராட்லியை விட்டு வெளியேறிய பின்னர், 13 பயணிகள் மற்றும் பணியாளர்களைக் கொண்ட பி -17 விமானம் தொழில்நுட்ப சிக்கலில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர்.

பின்னர் 13 பயணிகள் மற்றும் பணியாளர்களைக் கொண்ட பி -17 தொழில்நுட்ப சிக்கலில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விமானத்தின் நான்கு இயந்திரங்களிலும் கோளாறு ஏற்பட்டதால், விமானத்தை மீண்டும் தரையிறக்க விமானி முயற்சி செய்துள்ளார். விமானத்தில் ஏற்பட்ட தீயில் ஏழு பேர் இறந்தனர். மேலும் ஆறு பேர் உயிர் தப்பியுள்ளனர். ஆயினும், அவர்கள் பலத்த காயம் அடைந்துள்ள நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

#TamilSchoolmychoice

9 நியூஸ் இணைய செய்தித்தளம் குறிப்பிடுகையில், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஒரு குறிப்பிட்ட உயரத்தில் விமானத்தை நிலைநிறுத்திவதில் சிக்கல் ஏற்பட்டதை விமானி தெரிவித்ததாக பதிவிட்டிருந்தது.

துரதிர்ஷ்டவசமான விமானம் திரும்பி, தரையிறங்கும் முயற்சியின் போது விமானி கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படுகிறது. ஓடுபாதை ஊழியர் ஒருவரும் இச்சம்பவத்தில் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போர் வீரர்களின் சேவைகளை போற்றும் விதமாக அவ்விமான நிலையம் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய விமான கண்காட்சியை நடத்தியது என்று ஸ்பட்னிக்நியூஸ் தெரிவித்துள்ளது.