ஒரு ஹெலிகாப்டரில் 3 பேரும் மற்றொரு ஹெலிகாப்டரில் 7 பேரும் அந்தப் பயிற்சியின்போது இருந்தனர்.
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்படும் என மலேசியக் கடற்படை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. விபத்து குறித்த காணொலிகளை பொதுமக்கள் பகிர வேண்டாம் என்றும் மலேசியக் கடற்படை அந்த அறிக்கையில் குறிப்பிட்டது.
அருகிலிருந்த மற்றொரு பேராக் மாநில நகரான சித்தியவானில் உள்ள ஒரு திடலில் இருந்து காலை 9.03 மணிக்கு அந்த இரு ஹெலிகாப்டர்களும் புறப்பட்டன.
Comments