Home உலகம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் – அதிர்ச்சியில் மீள முடியாமல் சிங்கப்பூரில் தரையிறங்கினர்!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் – அதிர்ச்சியில் மீள முடியாமல் சிங்கப்பூரில் தரையிறங்கினர்!

255
0
SHARE
Ad
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் – கோப்புப் படம்

சிங்கப்பூர் : விமானப் பயணங்களின்போது வான்வெளியில் ஏற்படும் காற்றழுத்தம் காரணமாக விமானத்தில் அதிர்வுகளும், கொந்தளிப்பான ஆட்டமும் ஏற்படுவது வழக்கம்.

ஆனால், நேற்று (மே 21) செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரிலிருந்து லண்டன் நோக்கிச் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக அந்த விமானம் பாங்காக் நோக்கி திருப்பி விடப்பட்டது.

விமானம் ஆட்டம் கண்ட சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்ததோடு, பலர் காயமடைந்தனர். மோசமான விமான அதிர்வு காரணமாக 73 வயதான முதிய பயணி மாரடைப்பால் காலமானார்.

#TamilSchoolmychoice

பாதிப்படைந்த பயணிகள் இன்று புதன்கிழமை (மே 22) அதிகாலை 5.00 மணியளவில் சிங்கப்பூர் வந்தடைந்தனர். அவர்கள் இன்னும் அந்த சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை எனக் கூறப்படுகிறது.

விமான ஆட்டத்தின்போது, பயணிகள் சிலர் விமானத்தின் கூரை நோக்கி தூக்கி வீசப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன. மிகக் குறுகிய கால அவகாசத்தில் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென 31 ஆயிரம் அடி தாழ்வான நிலைக்கு இறக்கம் கண்டதுதான் கொந்தளிப்புக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாங்காக்கில் பயணிகள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் நிர்வாகம் 71 பயணிகள் சிகிச்சை பெற்றதாக அறிவித்தது. ஆனால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமோ 30 பயணிகள் மட்டுமே காயமடைந்ததாக தெரிவித்தது.

பயணிகள் மீண்டும் சிங்கப்பூர் திரும்பியதைத் தொடர்ந்து அவர்களிடம் பேட்டி காண ஊடகவியலாளர்கள் விமான நிலையத்தில் குழுமியிருந்தனர்.