Home One Line P1 “இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் கருத்துகளை பிரதமர் உபயோகிக்கக் கூடாது!”- அன்வார் இப்ராகிம்

“இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் கருத்துகளை பிரதமர் உபயோகிக்கக் கூடாது!”- அன்வார் இப்ராகிம்

903
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மலாய் தன்மான காங்கிரசை இன அல்லது மத உணர்விற்கான தளமாக மாற்ற மாட்டார் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்புவதாகத் தெரிவித்தார்.

அவர் அனைத்து மலேசியர்களின் நலன்களையும் உள்ளடக்கும் ஒரு செய்தியை வழங்குவார் என்று நான் நம்புகிறேன்என்று அவர் நேற்றிரவு செய்தியாளர்களிடம் கூறினார்.

தாம் அக்கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்திய அன்வார், டாக்டர் மகாதீர் இந்த நிகழ்ச்சியில் பங்குக் கொள்வது பொருத்தமானதா என்று கூறினார்.

#TamilSchoolmychoice

டாக்டர் மகாதீர் அந்நிகழ்ச்சியில் நிகழ்த்தும் உரையின் உள்ளடக்கத்தைப் பொறுத்தே எல்லாம் அடங்கியிருக்கிறது என்று அவர் கூறினார்.

அதாவது, அவர் எப்போதும் அனைவருக்கும் பிரதமராக இருந்து வருகிறார். மலாய்க்காரர்களின் அபிலாஷைகளைப் பற்றி அவருக்கு நியாயமான அக்கறை இருப்பதாக நான் நினைக்கிறேன், ஆனால், அது அவர் சொல்வதைப் பொறுத்தது என்று நான் நினைக்கிறேன்,” என்று அன்வார் கூறினார்.

இருப்பினும், மக்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்கும் ஒரு தளமாக அம்மாநாடு இருக்கக் கூட்டது என்று அன்வார் சுட்டிக் காட்டினார்.

நமது திட்டத்தையும் அதன் தீர்மானங்களையும் கவனிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அரசியல் வெப்பநிலை மற்றும் இன பதட்டங்களை மேலும் மோசமடையச் செய்யாமல் இருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் மற்றும் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினரான சார்லஸ் சந்தியாகு ஆகியோர், டாக்டர் மகாதீர் அம்மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறினர்.

இந்த மாநாடு வருகிற ஞாயிற்றுக்கிழமை ஷா அலாமில் அமைந்துள்ள மெளாவதி அரங்கில் நடைபெறுகிறது.