Home One Line P1 அமைச்சுகளில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு 30,000 ரிங்கிட் வெகுமதி!

அமைச்சுகளில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு 30,000 ரிங்கிட் வெகுமதி!

1325
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அந்தந்த அமைச்சகங்களில் உள்ள முறைகேடுகளை அம்பலப்படுத்தத் துணிந்த அரசு ஊழியர்களுக்கு 30,000 ரிங்கிட் வரையிலும் வெகுமதி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

கூடுதலாக, அமைச்சகத்திற்கு நிதி சேமிப்பை வழங்கக்கூடிய, ஆக்க பூர்வமான மற்றும் புதுமையான முறைகளை அறிமுகப்படுத்தும் அரசு ஊழியர்களும் வெகுமதிகளை வழங்குவது கருத்தில் கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒருமைப்பாடு மற்றும் ஆளுமை விருது (ஐபிஏ) மற்றும் படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு (சிஐஏ) விருது என அழைக்கப்படும் இரண்டு விருதுகளுக்கான மதிப்பீட்டு நிலை இப்போது இறுதி நிலையில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

புகாரை அமைச்சின் பொதுச் செயலாளர் அல்லது பொருளாதார தலைமைச் செயலாளர் ஆகியோரின் மூலம் கொண்டு செல்லலாம். உயர் அதிகாரிகளின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே காவல் துறை அல்லது எம்ஏசிசிக்கு புகார் அறிக்கை அளிக்க முடியும் என்பதே அரசாங்கத்தின் ஆணை. சொந்தமாக புகார்களை கொடுக்க முடியாது.” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், முன்மொழியப்பட்ட வெகுமதிகள் மத்திய அமைச்சகங்களுக்கு மட்டுமே பொருந்தும், என்றும் மாநில அரசு மட்டத்திற்கு அல்ல என்று லிம் விளக்கினார்.

இரு விருதுகளையும் வென்றவர்கள் நவம்பரில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.