புது டில்லி: அண்மையில், டில்லி திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கும் முன்னாள் இந்திய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிறையிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி பிணை கேட்டு டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
அவருக்கு பிணை கொடுக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது. இதனிடையே, இன்று வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு சிரம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிறையில் வழங்கப்படும் உணவை சாப்பிட்டு சிதம்பரத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், வீட்டுச் சாப்பாடு வழங்கப்பட வேண்டும் என்றும் சிதம்பரம் டில்லி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீட்டிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவரது வீட்டு உணவு வழங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.