Home One Line P1 தஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி கூட்டத்திற்கு மொகிதின் தலைமையேற்றார்!

தஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி கூட்டத்திற்கு மொகிதின் தலைமையேற்றார்!

591
0
SHARE
Ad
படம்: நன்றி பேராக் டுடே

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை முவாரில் நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை என்று நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் குழுத் தலைவர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

இருப்பினும், சாத்தியமான சில பெயர்கள் வேட்பாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜோகூர் பெர்சாத்து தலைவருமான அவர் தெரிவித்தார்.

நாங்கள் வேட்பாளர்களின் பட்டியல் குறித்து இன்று விவாதிக்கவில்லை. ஆனால் அதனை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். யார் மிகவும் பொருத்தமானவர், யார் பிரபலமானவர், யார் புத்திசாலி, யார் படித்தவர், யார் உள்ளூர் காரராக இருக்கிறார் என்பதை நாங்கள் தீர்மானிப்போம். முடிவு செய்ய நாங்கள் நம்பிக்கைக் கூட்டணி தலைமைக்கு பெயரைச் சமர்ப்பிப்போம்,”என்று ஜோகூர் நம்பிக்கைக் கூட்டணி கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

தஞ்சோங் பியாய்யில் நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து பெர்சாத்து கட்சி வேட்பாளர் களம் இறங்க உள்ளதை மொகிதின் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, இந்த தேர்தலுக்கு தயாராவதற்கு முன்பதாக, இடைத் தேர்தல்களில் முந்தைய, கேமரன் மலை மற்றும் செமினி ஆகிய தோல்விகளில் இருந்து நம்பிக்கைக் கூட்டணி படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

தஞ்சோங் பியாயைப் பொறுத்தவரை, நாங்கள் மிகவும் பயனுள்ள மூலோபாயத்தையும், விரிவான பணிச்சூழலையும் கொண்டு வருவோம். மக்களுக்கு புரியாத சிக்கல்களை விளக்குவோம். கடந்த சில மாதங்களாக, பல்வேறு பிரச்சனைகள் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றில் சில சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளன. நம்பிக்கைக் கூட்டணியின் கொள்கை அல்லது திட்டம் பற்றி இன்னும் புரிந்து கொள்ளப்படாமல் உள்ளன.” என்று புத்ராஜெயாவில் நேற்று வியாழக்கிழமை அவர் குறிப்பிட்டார்.

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதியன்று டாக்டர் முகமட் பாரிட் முகமட் ராபிக் இறந்ததைத் தொடர்ந்து தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த பொதுத் தேர்தலில், பாரிட் மசீசவைச் சேர்ந்த வீ ஜெக் செங்கை 524 வாக்குகள் வித்தியாசத்தில்  தோற்கடித்தார்.