Home One Line P2 அஸ்ட்ரோவின் 5-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2019

அஸ்ட்ரோவின் 5-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2019

831
0
SHARE
Ad

கிள்ளான் – அஸ்ட்ரோவின் மாபெரும் 5-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2019 இவ்வாண்டும் மிகப் பிரமாண்டமாக நேற்று வியாழக்கிழமை அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கி எதிர்வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வரை, 4 நாட்களுக்குத் ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறவுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சி உள்ளூர் மற்றும் சர்வதேச இந்திய வர்த்தகர்கள் இடையே வணிக உறவுகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் வர்த்தக முகப்புகளில் வருகையாளர்கள் பாரம்பரிய உடைகள், இனிப்பு பண்டங்கள், ஆபரணங்கள், உணவு வகைகள், தொழில்நுட்பம், காப்புறுதி, இயற்கை வளம், தொலைத்தொடர்பு, சுற்றுலா முகவர்கள் என இன்னும் பலவற்றை இவ்வாண்டு இந்நிகழ்ச்சியில் எதிர்பார்க்கலாம்.

அதுமட்டுமின்றி, இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்காக நடனப் போட்டி, கோலம் போட்டி, அஸ்ட்ரோ வானவில் விருது விழா, ஆடல் பாடல், கேளிக்கை விளையாட்டு, பிரபலங்களின் சந்திப்பு, உள்ளூர் நட்சத்திரங்களின் வருகை, ராகா மற்றும் மண்ணின் மைந்தர்களின் கலைநிகழ்ச்சிகள் என இடம்பெறவுள்ளது.

#TamilSchoolmychoice

மேல் விவரங்களுக்கு www.astroulagam.com அகப்பக்கம் அல்லது www.facebook.com/AstroUlagam முகநூலை வலம் வருங்கள்.