Home One Line P2 3 இந்திய பொறியியலாளர்களை தலிபான் விடுவித்துள்ளது!

3 இந்திய பொறியியலாளர்களை தலிபான் விடுவித்துள்ளது!

702
0
SHARE
Ad

புது டில்லி: ஒரு வருடத்திற்கு மேலாக பிணைக் கைதிகளாக இருந்த மூன்று இந்திய பொறியியலாளர்களை விடுவித்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தலிபான் தெரிவித்துள்ளது. அதன் 11 உறுப்பினர்களை விடுவிப்பதற்காக, போராளிக்குழுவின் சில உயர் அதிகாரிகள் உட்பட, இன்று திங்கட்கிழமை ஓர் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகள் மாற்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்ததுள்ளதாக இரண்டு தலிபான் அதிகாரிகள் மேற்கோள் காட்டியதாக டி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தெரிவித்தது, ஆயினும், எங்கு நடந்தது என்பதை அவர்கள் வெளியிடவில்லை.

எந்தெந்த போராளிக்குழு கைதிகளை பரிமாறிக்கொண்டார்கள் என்ற தகவலும் இனைக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்ட தலிபான் உறுப்பினர்கள், ஆப்கானிய அதிகாரிகள் அல்லது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டவர்களா என்பதை அவர்கள் கூற மறுத்துவிட்டனர்.

#TamilSchoolmychoice

விடுவிக்கப்பட்ட தலிபான் தலைவர்களில் ஷேக் அப்துர் ரகிம் மற்றும் மவ்லாவி அப்துர் ராஷீட் ஆகியோர் அடங்குவர்.

இது குறித்து ஆப்கானியரிடமிருந்தோ அல்லது இந்திய அதிகாரிகளிடமிருந்தோ உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

ஆப்கானிஸ்தானின் வடக்கு பாக்லான் மாகாணத்தில் மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் ஏழு இந்திய பொறியாளர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் கடத்தப்பட்டனர். அவர்கள் கடத்தப்பட்டதற்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. பிணைக் கைதிகளில் ஒருவர் மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார். ஆனால், மற்றவர்களின் கதி என்னவென்றே தெரியவில்லை.