Home One Line P1 “முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவரிடம் நாட்டை ஒப்படைப்பது ‘ஹராம்’!”- ஹாடி அவாங்

“முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவரிடம் நாட்டை ஒப்படைப்பது ‘ஹராம்’!”- ஹாடி அவாங்

1400
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாத பிறரிடம் நாட்டை ஒப்படைப்பதுஹராம்’ என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் அல்லாதவரிடம் நாட்டினை ஒப்படைப்பது, வீட்டுக்கு வந்தவர்களிடம் தனது சொந்த வீட்டைக் கொடுத்ததற்கு சமம் என்று தெரிவித்தார்.

மலாய் தீவில் உள்ள மலாய் நாகரிகமும் இஸ்லாத்திற்கு பிறகு மிகச் சிறந்ததாக இருந்தது. துருக்கியர்கள், குர்துகள் மற்றும் பிறரும் அப்படித்தான். அவர்கள் அடுத்தடுத்த ஆக்கிரமிப்பின் வீழ்ச்சியில் இஸ்லாத்தை கைவிட்டதால் வீழ்ச்சி ஏற்பட்டதுஎன்று அவர் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

முஸ்லிம்கள் உறுதியாக இருந்து, பல நூற்றாண்டுகளாக இஸ்லாத்துடன் இருந்ததை நினைவூட்டிய அவர், இஸ்லாத்தை பின்பற்றாத பிற நாடுகள் நீண்ட காலம் நிலைக்காமல் போனதை சுட்டிக் காட்டினார்.

இஸ்லாம் இல்லாத பிற நாடுகளின் நாகரிகங்கள் இறுதியாக தங்கள் சொந்த மக்களை அழித்துவிட்டன.” என்று அவர் கூறினார்.