கோலாலம்பூர்: அம்னோ மற்றும் பாஸ் உடன் புதிய அரசாங்கத்தை அமைக்க அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் அழைப்பு விடுத்ததை அடுத்து பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அதனை நிராகரித்தார்.
ஒரு பன்முக அரசாக இருக்கும் பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட இனக்குழுவால் மட்டும் ஆட்சி அமைக்கப்படுவது சரியானதல்ல. அது பன்மை சமுதாயத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
“ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. நம் நாடு பல இன மக்களைக் கொண்ட நாடு என்பதையும், அனைத்து இன உறுப்பினர்களையும் கொண்டு நம் அரசாங்கம் இப்போது வரை சுதந்திரமாக உள்ளது என்பதையும் அறிவோம். நம் நாடு பல இன மக்களைக் கொண்டது, அனைத்து இனங்களுக்கும் நம் நாட்டில் உரிமைகள் உள்ளன என்பதையும் யாராலும் மறுக்க முடியாது என்பது ஓர் உண்மை” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.