Home One Line P1 சைட் மொக்தார் நிறுவனம் உத்துசானின் பெரும்பான்மையான உரிமத்தை பெற உள்ளது!

சைட் மொக்தார் நிறுவனம் உத்துசானின் பெரும்பான்மையான உரிமத்தை பெற உள்ளது!

715
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சைட் மொக்தார் அல் புக்காரியை சார்ந்த நிறுவனம் ஒன்று, கொஸ்மோ மற்றும் உத்துசான் மெலாயு நிறுவனத்தின் பெரும்பான்மையான உரிமத்தை பெற உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

உத்துசான் மெலாயு (மலேசியா) பெர்ஹாட் தனது முழு சொந்தமான துணை நிறுவனமான திலோஃப் செண்டெரியான் பெர்ஹாட் 70 விழுக்காடு உரிமத்தை அரோரா முலியா செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்துக்கு அளிக்கப் போவதாகக் கூறியுள்ளது.

“80 வயதான உத்துசான் மலேசியா செய்தித்தாள் புதைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், 15 வயதான கொஸ்மோ செய்தித்தாளைத் தொடரவும் இந்த முடிவுஎன்று உத்துசான் மெலாயு பெர்ஹாட் நேற்று செவ்வாய்க்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு, அரோரா முலியா மீடியா ப்ரிமா பெர்ஹாட்டில் தனது பங்குகளை 31.22 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், உத்துசான் மலேசியா மற்றும் கொஸ்மோ இன்று புதன்கிழமை தனது செயல்பாட்டை நிறுத்திவிடும் என்றும் பிற்பகலில் பணிநீக்கம் குறித்து அனைத்து ஊழியர்களுக்கும் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

நிறுவனத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிக்க இன்று அலுவலகத்திற்கு வருமாறு அவர்களிடம் கூறப்பட்டுள்ளது.

ஊழியர்கள் 48 மணி நேரத்திற்குள் அலுவலகத்தை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (இன்று புதன்கிழமை) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்.”

அவர்கள் எங்களுக்கு ஒரு கடிதம் அனுப்புவார்கள், ஆனால் நிலுவையில் உள்ள சம்பளத்தை திருப்பிச் செலுத்துவார்களா, இழப்பீட்டுத் தொகை என்னவாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லைஎன்று ஊழியர் ஒருவர் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.