Home நாடு வரவு செலவுத் திட்டம் 2020 : பிரசவ விடுமுறை இனி 90 நாட்கள் – நெடுஞ்சாலை...

வரவு செலவுத் திட்டம் 2020 : பிரசவ விடுமுறை இனி 90 நாட்கள் – நெடுஞ்சாலை வரிக் கட்டணம் 18% விழுக்காடு குறைப்பு

715
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 2020 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான பிரசவ விடுமுறை தற்போதிருக்கும் 60 நாட்களிலிருந்து இனி 90 நாட்களாக உயர்த்தப்படும்.

நாடெங்கிலும் உள்ள நெடுஞ்சாலை வரிகளுக்கான (டோல்) கட்டணங்கள் 18 விழுக்காடு குறைக்கப்பட்டு இதன் மூலம் பொதுமக்கள் கணிசமான தொகையை மிச்சப்படுத்துவர் என்றும் லிம் குவான் எங் அறிவித்தார். பிளஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா நெடுஞ்சாலைகளிலும் இந்தக் கட்டணக் குறைப்பு அமுலுக்கு வரும்.

கெசாஸ், எல்டிபி, ஸ்பிரிண்ட், ஸ்மார்ட் ஆகிய நெடுஞ்சாலைகளை அரசாங்கமே இனி எடுத்துக் கொண்டு நிர்வகிக்கும். இந்த நெடுஞ்சாலைகளில் இனி சாலைவரி (டோல்) 30 விழுக்காடு குறைக்கப்படும்.

#TamilSchoolmychoice

லிம் குவான் எங் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வரும் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மேலும் சில அம்சங்கள் பின்வருமாறு:

  • குறைந்த பட்ச மாதச் சம்பளம் இனி 1,200 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் மட்டும் முதல் கட்டமாக இந்த மாதச் சம்பளம் அமுலாக்கப்படும். தற்போது குறைந்த பட்ச மாதச் சம்பளம் 1,100 ரிங்கிட்டாக இருக்கிறது.
  • குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர் நவீன மருத்துவ வசதிகளின் மூலம் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள ஊழியர் சேமநிதி வாரியத்திலிருந்து (இபிஎப்) இனி தங்களின் சேமிப்பின் ஒரு பகுதியை மீட்டுக் கொள்ள முடியும்.
  • 2 மில்லியன் ரிங்கிட்டுக்கும் கூடுதலான வருமானம் பெறுபவர்களுக்கான வருமான வரி விழுக்காடு இரண்டு விழுக்காடு அதிகரிக்கப்பட்டு இனி 30 விழுக்காடாக உயர்த்தப்படும்.

(மேலும் விவரங்கள் தொடரும்)