Home One Line P1 “சந்தேகம் இருந்தால் விசாரணைக்கு அழைக்கலாம், சோஸ்மா தேவையற்றது!”- அம்பிகா

“சந்தேகம் இருந்தால் விசாரணைக்கு அழைக்கலாம், சோஸ்மா தேவையற்றது!”- அம்பிகா

846
0
SHARE
Ad
படம்: நன்றி மலாய் மெயில்

கோலாலம்பூர்: நேற்று வியாழக்கிழமை பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) சட்டத்தின் கீழ், இரண்டு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்களை புக்கிட் அமான் காவல் துறை கைது செய்திருக்கக் கூடாது  என்று முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் அம்பிகா சீனிவாசன் தெரிவித்தார்.

இலங்கை கிளர்ச்சிக் குழுவான தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் அந்நபர்களை காவல் துறையினர் அழைத்து விசாரனை நடத்தலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

நீங்கள் அவர்களை விசாரிக்க அழைக்கலாம். இந்த அரசாங்கத்தின் கீழ் இது நடப்பதில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” என்று இன்று வெள்ளிக்கிழமை காலை கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக நேற்று, விடுதலைப் புலிகள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி ஜி.சாமிநாதன் மற்றும் பி.குணசேகரன் ஆகிய இரு மாநில சட்டமன்ற உறுப்பினர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.