Home One Line P1 “இளைஞர்களை தீவிரவாதத்திற்கு தூண்டுகின்ற ஜாகிரின் கைது எப்போது?”- ஜசெக இளைஞர் பகுதி

“இளைஞர்களை தீவிரவாதத்திற்கு தூண்டுகின்ற ஜாகிரின் கைது எப்போது?”- ஜசெக இளைஞர் பகுதி

1098
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுபவர்கள் மீது பயங்கரவாத எதிர்ப்பு ஒடுக்குமுறையைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பினாங்கு ஜசெக இளைஞர் பகுதி காவல் துறைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

2016-ஆம் ஆண்டு டாக்கா குண்டுவெடிப்பு மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை தேவாலயங்கள் மீது ஈஸ்டர் குண்டுவெடிப்பு போன்ற பல பயங்கரவாத தாக்குதல்கள் ஜாகிரின் போதனைகளால் செல்வாக்கு பெற்ற நபர்களால் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறியது.

#TamilSchoolmychoice

இரண்டு தாக்குதல்களையும் தொடர்ந்து, பங்களாதேஷ் மற்றும் இலங்கை அரசாங்கங்கள் ஜாகிரின் அமைதி தொலைக்காட்சி அலைவரிசையை தடை செய்தன.

தமது தாய்நாடான இந்தியாவில் ஜாகிர் எதிர்கொள்ளும் பணமோசடி குற்றச்சாட்டுக்கும் பயங்கரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக அது குற்றம் சாட்டியது.

ஜாகிர் இளைஞர்களை தீவிரவாதத்திற்கு தூண்டுகின்ற ஒரு உறுப்பு என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. இது பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. காவல்துறை இந்த முன்னேற்றங்களைப் பின்பற்றவில்லையா அல்லது அவர்கள் அதைப் பின்பற்ற விரும்பவில்லையா? நாட்டில் அமைதியை அச்சுறுத்தும் ஜாகிர் போன்ற தீவிரவாத சக்திகளுடன் சார்ந்திருக்காமல், மலேசியாவை இது போன்ற பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்என்று அது இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று வியாழக்கிழமை, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி ஜசெகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் உள்ளிட்ட ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.