Home One Line P2 ரஜினி 168: சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்குகிறார்!

ரஜினி 168: சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்குகிறார்!

712
0
SHARE
Ad

சென்னை: வருகிற பொங்கலுக்கு ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் உருவாக உள்ளதாக அந்நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், தற்போது விஸ்வாசம் இயக்குனர் சிவாவுடன் இணைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இயக்குநர் சிவா ரஜினிகாந்தை இடையில் சந்தித்து பேசியதாகவும், தற்போது ரஜினியின் 168 படத்தை சிவா இயக்குவதாகவும், பேட்ட படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.