Home One Line P2 அமெரிக்கா – சீனா வணிகம் முதல் கட்ட உடன்பாடு காணப்பட்டது

அமெரிக்கா – சீனா வணிகம் முதல் கட்ட உடன்பாடு காணப்பட்டது

820
0
SHARE
Ad
டொனால்ட் டிரம்ப் – கோப்புப் படம்

வாஷிங்டன் – உலகம் எங்கும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வரும் அமெரிக்கா-சீனா இடையிலான வணிகப் போர் வெப்பம் தணிந்து, ஒரு முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இரு நாடுகளும் முதல் கட்ட வணிக உடன்பாட்டைக் கண்டுள்ளன என்றும் அது மிகக் கணிசமான முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 11) அமெரிக்கப் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.

அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கும் சீனாவின் துணை அதிபர் லியூ ஹி, டிரம்பை வெள்ளிக்கிழமை பிற்பகலில் சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் அறிவார்ந்த சொத்துடமை, நாணயப் பரிமாற்றம் விவசாய விற்பனைகள் ஆகியவையும் உள்ளடங்கும் என டிரம்ப் தெரிவித்திருக்கிறார். எனினும் உடன்பாட்டின் முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

“நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன” எனவும் டிரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் அமெரிக்கா-சீனா உடன்பாடு தொடர்பில் பதிவிட்டுள்ளார்.