Home One Line P2 22 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த பிகில் முன்னோட்டம்!

22 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த பிகில் முன்னோட்டம்!

924
0
SHARE
Ad

சென்னை: வருகிற தீபாவளி பண்டிகைக்கு வெளிவர இருக்கும் நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

இரசிகர்களின் ஆவலுக்கு ஏற்ப முன்னோட்டக் காணொளி சிறப்பாக அமைந்துள்ளதாக சமூகப் பக்கங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது.

பிகில் திரைப்படத்தில் விஜய்க்கு இணையாக நயன்தாரா இணையும் வேளையில், விவேக், கதிர், இந்துஜா, டேனியல் பாலாஜி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வெளியான இரண்டு நாட்களில் இக்காணொளி 22 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. கீழே கொடுக்கப்பட்ட இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: