கோலாலம்பூர்: மலேசியாவில் புத்துயிர் பெற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு அபத்தமானது என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் 2009-இல் அதன் தலைமையின் அழிவு மற்றும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றதன் மூலம் முடிவடைந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எனவே, மலேசியாவிலோ அல்லது வேறு இடங்களிலோ புலிகள் புத்துயிர் பெறுவார்கள் என்று நினைப்பதில் அர்த்தமில்லை. விடுதலைப் புலிகளின் நினைவுச்சின்னத்தில் நினைவஞ்சலி செலுத்துவது அந்த அமைப்பை புத்துயிர் கொடுத்து மறுபடியும் அமைப்பதற்கு சமமல்ல” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு அரசியல்வாதியான சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் மூலமாக மலேசியாவில் விடுதலைப் புலிகள் புத்துயுர் பெற்று வருகிறது என்ற குற்றச்சாட்டை குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்.
“30 ஆண்டுகளுக்கு முன்பதாக விடுதலைப் புலிகள் மற்றொரு ஆயுதப் போராட்டத்தை நடத்தும் என்று நினைப்பது அபத்தமானது” என்று அவர் கூறினார்.