கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து அமைச்சரவையில் வெள்ளை அறிக்கையை முன்வைக்க வேண்டும் என்ற பாஸ் கட்சியின் முன்மொழிவுக்கு தேசிய முன்னணி தலைவர் டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
புலிகள் குறித்து நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த நடவடிக்கை அவசியம் என்று அகமட் சாஹிட் கூறினார்.
“இது அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும்” என்று அவர் கூறினார்.
இந்த விவகாரம் மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட வேண்டும், குறிப்பாக விடுதலைப் புலிகளின் இருப்புக்கு அனுதாபம் கொண்டவர்களுக்கு இது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
விடுதலைப் புலிகள் குறித்த வெள்ளை அறிக்கையை முன்வைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்திய பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் அளித்த அறிக்கை குறித்து அகமட் சாஹிட் கருத்து தெரிவித்தார்.
அந்த அமைப்புடன் ஜசெக உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து இது குறிப்பிடப்பட்டுள்ளது.