Home One Line P2 “ஹாங்காங்கிடமிருந்து சீனாவை பிரிக்க முற்பட்டால் உயிர் சேதங்கள் ஏற்படும்!”- சீன அதிபர்

“ஹாங்காங்கிடமிருந்து சீனாவை பிரிக்க முற்பட்டால் உயிர் சேதங்கள் ஏற்படும்!”- சீன அதிபர்

756
0
SHARE
Ad

ஹாங்காங்: ஹாங்காங்கில் வழுத்து வரும் போராட்டத்தின் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பெங் ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு எரச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு வேளை, சீனாவை ஹாங்காங்கிடமிருந்து பிரிக்க முற்பட்டால், உயிர் சேதங்கள் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங்கில் தொடங்கிய பல அமைதியான போராட்டங்கள் கலவரத் தடுப்பு காவல் துறை மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையில் வன்முறையாக முடிந்தது. பொதுப் போக்குவரத்து நிலையங்கள் மற்றும் சீன ஆதரவு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிராகக் கடந்த ஜூன் மாதம் போராட்டம் தொடங்கியது. இந்த மசோதா அந்நாட்டின் நீதி சுதந்திரத்தைப் பாதிக்கும் என அஞ்சப்பட்ட நிலையில், அது கைவிடப்பட்ட போதும், மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.