Home One Line P2 அதிக வருமானம் பெறுவோருக்கு கூடுதல் வரிவிதிப்பால் மேலும் 100 மில்லியன் வசூல்

அதிக வருமானம் பெறுவோருக்கு கூடுதல் வரிவிதிப்பால் மேலும் 100 மில்லியன் வசூல்

853
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த அக்டோபர் 11-ஆம் நாள் சமர்ப்பிக்கப்பட்ட 2020 வரவு செலவுத் திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்று ஆண்டுக்கு 2 மில்லியன் ரிங்கிட்டுக்கும்  கூடுதலான வருமானம் பெறுபவர்களுக்கு தற்போது விதிக்கப்படும் 28 விழுக்காட்டு வருமான வரி உயர்த்தப்பட்டு 30 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகும்.

இந்த கூடுதல் வரிவிதிப்பு மூலம் 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கும் என நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார்.

இது நியாயமான ஒன்று என வாதிட்ட குவான் எங், இதுபோன்ற கூடுதல் வரிவிதிப்பை உலக வங்கியே சிபாரிசு செய்திருக்கிறது என்றும் அவர்கள் பரிந்துரைப்பது 35 விழுக்காடு வரிவிதிப்பு என்றும் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அதிக வருமானம் பெறுவோருக்கு மலேசியாவில் விதிக்கப்படும் வரி குறைவானதே என்றும் உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இந்தப் புதிய வரி விதிப்பின் மூலம் சுமார் 2,000 பேர் பாதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோர் வணிகர்கள் அல்லது பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகப் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய புதிய வரிவிதிப்புகளின் மூலம் ஏற்படும் தாக்கங்களை பணக்காரர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் குறிப்பிட்ட குவான் எங் அவர்களின் மூலம் பெறப்படும் கூடுதல் வரிகளின் மூலம் நாடு பொருளாதார வளர்ச்சி காணும் என்றும் தெரிவித்தார்.