Home One Line P2 சம்பந்தனின் மறைவு மலேசிய தமிழர்களுக்கு பேரிழப்பாகும்!- தொல்.திருமாவளவன்

சம்பந்தனின் மறைவு மலேசிய தமிழர்களுக்கு பேரிழப்பாகும்!- தொல்.திருமாவளவன்

926
0
SHARE
Ad

சென்னை: மலேசிய தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ஐபி௭ப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம். சம்பந்தன் அவர்கள் காலமானதை அறிந்து தாம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் தலைவர் எம்.ஜி. பண்டிதன் அவர்களின் நம்பிக்கைக்குரிய தளபதியான சம்பந்தன் இன்று இல்லை என்பது ஏமாற்றமளிப்பதாக அவர் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அவருடைய இழப்பு மலேசியவாழ் தமிழர்களுக்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்அவரை இழந்து வாடுகிற அவரது குடும்பத்தினருக்கும் ஐபி௭ப் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

பண்டிதன் போலவே அவர் மீதும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மீதும் நன்மதிப்பும் நல்லன்பும் சம்பந்தன் கொண்டிருந்தார் என்றும் திருமாவளவன் தெரிவித்தார். விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்