Home One Line P2 ஷாருக்கானுடன் இணையும் அட்லி!

ஷாருக்கானுடன் இணையும் அட்லி!

919
0
SHARE
Ad

சென்னை: தமிழ் திரைப்படவுலகில் முன்னணி இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் அட்லி நடிகர் ஷாருக்கானை வைத்து திரைப்படமொன்றை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக இரசிகர்களின் நம்பிக்கையைப் பெற்ற இயக்குனராக அட்லி திகழ்கிறார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் என இரண்டு படங்களை இயக்கி, தற்போது, மூன்றாவது படமான பிகில் படமும் வெளியாக உள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இயக்குனர் அட்லி அடுத்ததாக ஷாருக்கானை வைத்து திரைப்படம் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ள  நிலையில், தமிழ், இந்திமொழிகளில்இப்படம்தயாராகஉள்ளது.